இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம்
இன்று சிறகுகள் முளைத்து
ஆனால்
இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும்
இன்னும் கலையாத கனவுகளாய்
மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன்
மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்
வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமே
கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,
அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்
இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்
எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !
ஏற்றிக் கட்டிய கோவணம்,
சூரியனை மிரட்டும் இருட்டுத் தேகம் ,
வற்றிப்போன நதியாய் இவனின் இரத்தம்,
வற்றாத கடலாய் இவனின் உழைப்பு என
அனைத்தையும் குழைத்து ஏர் பிடித்து
பூமி கிளரிய பழைய மனிதன் இன்று
பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தருகிறான்.
வியர்வைகளை சேற்றில் மட்டுமே
சிந்தியதால்தான் என்னவோ
இன்னும் அழுக்காகவே இருக்கிறது
என் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை !
நீ இன்றி ஓர் இரவு !!!
சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில்
சந்தோசம்தான் ….
புரிந்தது உன் பார்வை
தீண்டிய நேரத்திலெல்லாம் ..
உன் மன இருந்தாலும்
அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்..
எப்படி இது சாத்தியம் ??
தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு .
நேற்றிரவு …
உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள்
இன்றும் ஏனோ ஊனமாய்..
என்றும் இல்லாத நிசப்தம்
அதிலும் ஓங்கி ஒலித்தபடி
வெகு நேரமாய் உன் நினைவுகள் ..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் …
பொம்மையை தவறவிட்ட குழந்தைபோல்….
வேறெதுவும் தோன்றாது கணணியை
வெறித்து நோக்கியபடி நெடுநேரமாய் நான்…
படுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்….
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்….
தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!
நீ
ஒரு சிற்பி
உன் கையின் உளி நான் ..
ஆக்குபவன் நீ
கருவியாய் நான்
நீயோ உன் பெருந்தன்மையால்
நீ சொன்னாய்
என் அன்பில் கருவுற்றன
உன் கவிதைகள் என .
உண்மையாக இருக்கலாம் ஆனால்
அதைவிட உண்மை
நீ
என்னை அவ்வப்பொழுது
விட்டு செல்லும்
தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
வார்த்தைக் குழந்தைகள் !!…..
New Updates Coming Soon
இந்த கவிதைகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். Thanushker.blogspot.com
ReplyDelete