நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
பொதுவான குணம் ஒரு கிலோ கிராம் தேன் ஐந்து லட்சம் மலர்களில் இருந்து பெறப்படுகிறது. தேனும், நெய்யும் கலக்க கூடாது. கலந்தால் அது நஞ்சாகும். தேனும், முட்டையும்
கலக்கக்கூடாது. தேனும், சீனியும் கலக்கக்கூடாது. தேன் சூடாகும் போது சத்துகளை இழந்துவிடும்.
வேறுபெயர்கள்
ஆங்கிலப்
பெயர் HONEY
மருத்துவக் குணங்கள்
மருத்துவக் குணங்கள்
அழகு மலர்கள் மனிதர்களுக்கு வழங்கும் இயற்கை, ஒப்பற்ற மருந்து தேனாகும்.
பலவகை தேன்கள் கிடைக்கின்றன. இனிப்பு சுவையாக இருந்தாலும் சுத்தமான தேன் உடலுக்கு கசப்பு
சுவையைக் கூட்டி நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு உடனடி சக்தி தரும். நாக்கில் பட்டவுடன் உயிர்
காக்கும் மருந்தைப்போல் உடனடியாக இரத்தத்தில் கலக்கும்.
தேன் சுவைக்கு இணையான
பொருள் எங்கும் கிடைக்கவில்லை. கண் ஒளி கூட்டும். விளையாட்டு துறை அன்பர்களுக்கு
இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும். 80% காரம்,
20% அமிலம் கலந்த மனிதனின் சரிவிகித உணவு. கழிவுகள் இல்லா உணவு.
டிபி, சளி, இருமல் குணம் அடையும்.
உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர்.
நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
இதயம், ஈரல் பலம் பெறும்.
குரல் வளம். கண் ஒளி
மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன.
No comments:
Post a Comment