இந்த
மாணவி பெயர் சுனந்தா கயர்வர். மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம்
நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா இங்குள்ள பள்ளிக்கூடத்தில்
பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள்
எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேர்வில் சாதனை படைத்த இந்த பிளஸ்-2 மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
(முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கு கிடைத்தது போல) கிடைத்துள்ளது.
காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பார்.
இதற்கான சட்ட நடைமுறைகளையும் மேயர் ஷோபா யாதவ் செய்து அரசிடம் முறைப்படி
அனுமதி பெற்றுள்ளார்.
25-ந்தேதி
மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள்
பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில்
கையெழுத்திடுகிறார்.
அந்த மாணவியை நாமும் வாழ்த்துவோம்....
No comments:
Post a Comment