விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Friday, May 24, 2013

Download செய்கிறீர்களா? எச்சரிக்கை குறிப்புகள்


வணக்கம் நண்பர்களே..!

இக்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எதாகினும் ஒரு மென்பொருளைத் தங்களது தேவைகளுக்கேற்ப இணையத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டி உள்ளது.

download-carful information
குறிப்பாக இலவச மென்பொருள்களை நம்மில் பலர் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம்.

இலவசமாக வழங்குவதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு என்ன நன்மை?

இருக்கவே செய்கிறது.. ஒன்று அந்நிறுவனத் தயாரிப்புகளை (softwares) விளம்பரப்டுத்தி சந்தைப்படுத்துவது.


மற்றொன்று அந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும்பொழுது,தரவிறக்கம் செய்யப்படுகிற மென்பொருளோடு Spyware, Virus போன்ற புரோகிராம்களும் சேர்ந்து தரவிறங்கும் வகையில் அமைத்திருப்பது.

பெரும்பாலான இலவச மென்பொருள்கள் இரண்டாவது வகையைதான் பின்பற்றுகிறது.

அப்படியெனில் இலவச மென்பொருள்களைப் பயன்படுத்துவது ஆபத்து என பொருளல்ல...

இலவச மென்பொருள்களை தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் அதனுடன் சேர்ந்து நமது கணினியில் தரவிறங்கும் Spyware, Virus களை நீக்குவது முக்கியம்.

நாம் தரவிறக்கி பயன்படுத்தும் பெரும்பாலான மென்பொருள்களில் இதுபோன்ற தேவையற்ற புரோகிராம்கள் இருப்பதால் அவற்றை நீக்க, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள், Spyware cleaner போன்ற நன்மை தரும் புரோகிராம்களை இயக்கி அவற்றை நீக்கிவிடலாம்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமும் இதுபோன்ற தேவையற்ற புரோகிராம்கள் நீக்கிவிடலாம்.

எப்படி?

நாம் ஒரு இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்யும் முன்பு, அப்பக்கத்தில் உள்ள இணைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் அம்மென்பொருளைப் பற்றி பிறர் அளித்துள்ள கருத்துகளையும் அப்பக்கத்தில் படித்து முடித்தப் பிறகே Download செய்யத் தொடங்க வேண்டும்.

இப்படி அப்பக்கத்திலுள்ள கருத்துகளை படிப்பதன் மூலம் ஓரளவிற்கு அம்மென்பொருளின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

மென்பொருளுக்குரிய உண்மையான தளத்திலிருந்து தரவிறக்கம் செய்வது நல்லது. பிற தளங்களிலிருந்து டவுன்லோட் செய்வது பாதுகாப்பிற்கு உகந்ததல்ல.

Google, Yahoo போன்ற மிகப் பிரபலமான தேடல் வலைத்தளத்தைத் திறந்து, அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய மென்பொருளின் பெயர், அக்கோப்பின் பெயர் இவற்றோடு spyware, virus என்ற சொற்களையும் கொடுத்து தேடினால், இதற்கு முன்பே இம்மென்பொருளை தரவிறக்கி, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அவைகளைப் பற்றி மற்ற பயனர்கள் எழுதியிருப்பர். எச்சரிக்கை செய்திருப்பார்கள்.

இவ்வாறு தட்டச்சிட்டு தேடுவதால் மென்பொருளைப் பற்றி பிறரின் எண்ணங்கள், கருத்துகள், பாதுகாப்பு தன்மைகள் குறித்து நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இதனால் அம்மென்பொருளைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்து விடலாம். நாம் தரவிறக்க வேண்டிய மென்பொருள் நல்லதா  கெட்டதா என நமக்கும் தெரிந்துவிடும்.

தரவிறக்கம் செய்து மென்பொருள் கோப்பினை நிறுவும் முன்பு, கணினியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி சோதனை செய்துகொள்வது நல்லது. இதனால் மென்பொருளை நிறுவிய பிறகு ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துவிடலாம். வைரஸ் இணைந்தே கொடுக்கப்பட்டிருக்கும் மென்பொருளைகள் இதன் மூலம் தவிர்த்துவிடலாம்.

இறுதியாக இதனையும் நான் அடிக்கடி செய்துகொள்ள வேண்டும். அதாவது கணினியில் உள்ள கோப்புகளை அடிக்கடி பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் கணினியில் ஏதேனும் அபாயகரமான வைரஸ் தாக்குதல் ஏற்படும்போது கூட நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

பிறகு தேவையெனில் கணினியை Restore செய்துவிடுவதன் மூலம் மீண்டும் கணினி பழைய நிலையை அடைந்துவிடும்.

இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கணினியில் வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும். நம்முடைய தகவல்களும் பாதுகாக்கப்படும்...


நன்றி நண்பர்களே..                                                                                                                     
                                                                                                                                                                    !இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.                                                                                            G.Thanus

No comments:

Post a Comment