விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Tuesday, May 28, 2013

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....  http://omnitechsupporter.com/wp-content/uploads/2012/10/ms-word-2-256x256.png

நீங்கள் எம்.எஸ். வேர்ட் பயன்படுத்துகிறீர்களா?

தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போது வெள்ளைநிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைப் பார்த்து கண்கள் சோர்வடைந்து போகலாம்.

வருடக்கணக்காக எம்.எஸ். வேர்ட் (MS-Word) பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்னையாகவும், கண்ணொளி குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறதாம்.

இதற்கு ஒரு மாற்றுவழி Microsoft கொடுத்திருக்கிறது.

மாற்றுவழியை செயல்படுத்தி உங்கள் MS-Word -ன் பின்னணி நிறத்தை மாற்றிப் பயன்படுத்த முடியும். Background Color மட்டமல்ல..

எழுத்துகளின் நிறத்தையும் மாற்றிப் பயன்படுத்த முடியும். இம்மாற்றங்களினால் கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கலாம்.

செயல்படுத்தும் முறை:

1. இதைச் செயல்படுத்த MS-Word திறந்துகொள்ளுங்கள்.
2. அதில் Tools Menu செல்லுங்கள்.
3. தோன்றும் Drop Down Menu-வில் Options தேர்ந்தெடுக்கவும்.
4. Options-ல் General டேபை கிளிக் செய்யுங்கள்.
5. General Tab கிளிக் செய்து திறக்கும் பெட்டியில் "blue background with white text" என்பதில் டிக் மார்க் (Tick Mark) ஏற்படுத்தி வெளியேறுங்கள்.

பிறகு நீங்கள் ஒவ்வொரு முறையும் Word Document திறக்கும்போது நீல நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துகளுடன் தெரியும்.

இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் முன்பு செய்த படிமுறைகளிலேயே சென்று blue background with white text என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிடுங்கள். வேர்ட் டாக்குமெண்ட்டானது முன்பு இருந்தபடியே வெள்ளை நிற பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களோடு (White background and black text)இருக்கும்..                                             Thanus

3 comments:

  1. Thanks for information

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  3. கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete