இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் மென்பொருள்..!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்களில் தேவையில்லாமல் விளம்பரங்கள்
குறுக்கீடு செய்யும். ஒரு முக்கியமான செய்தியைப்
படித்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றி அந்த செய்தியை
படிப்பதிலிருந்து மறைக்கும்.
இந்த முறையில் விளம்பரங்கள் வைத்து அதன் மூலம் அதிக வருமானத்தை, அதிக
கிளிக்குகள் பெற முடியும் என்ற எண்ணத்தில் அந்த இணையத்தளங்கள் அவ்வாறு
விளம்பரங்கள் தோன்ற நிரல்களை எழுதியிருப்பர்.
இதுபோன்ற செயல்களால் தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக சிரமத்தையும், சில நேரங்களில் எரிச்சலடையச் செய்யும்.
அதே போன்று உலகில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள், தங்களுக்கு விருப்பமான
வீடியோக்களை யூடியூப் தளத்தின் மூலம் கண்டு களிக்கின்றனர். விளையாட்டுச்
செய்திகள் முதல், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் வரை எந்த ஒரு
நிகழ்வாகட்டும் உடனுக்குடன் யூடியூபில் வீடியோவாக தரவேற்றப்படுகிறது.
ஒரே நாளில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் தரவேற்றப்படும் யூடியூப் தளத்தில்
இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பயன்மிக்க வீடியோக்களும்
அதில் அடங்கியுள்ளன.
இவ்வாறு உள்ள யூடியூப் வீடியோக்களை தற்பொழுது அதிகம் விளம்பரங்கள் சூழத்
தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வீடியோவைப் பார்ப்பதற்கு முன்பும்,
பார்த்துக்கொண்டே இருக்கும்போது இடையிடையேயும் விளம்பரங்களும் தோன்றும்.
இப்படி வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே விளம்பரங்களும் தோன்றுவதால்
வீடியோவை பார்ப்பதில் ஒரு வித சலிப்பு, வெறுப்பு ஏற்படும்.
இவ்வாறு இணையத்தில் பல்வேறு தளங்களில் பல பயன்மிக்க தகவல்கள் இருப்பினும்,
அவற்றை காணும்போது சில நேரங்களில் இதுபோன்ற விளம்பர இடையூறுகள் ஏற்படும்.
விளம்பர இடையூறு இல்லாமல் ஒரு வீடியோ முழுவதையும் பார்க்கவும், விளம்பர
இடையூறின்றி இணையதளங்களை வாசிக்கவும் உதவுகிறது ADD Block போன்ற Add On
தொகுப்புகள்.
இத்தொகுப்புகளில் வேலை என்னவென்றால் நாம் வாசிக்கும் இணையதளம், அல்லது
வீடியோ பார்க்கும் இணையதளமொன்றில் தோன்றும் விளம்பரங்களைத் தடைசெய்வதுதான்.
காட்சிக்கு விளம்பரங்கள் தோன்றாமல் தடைசெய்துவிடுவதால் விளம்பர இடையூறு
ஏதுமின்றி விரைவாக அத்தளத்தை வாசிக்க முடியும்.
கூகிள் குரோம், பயர்பாக்ஸ் போன்ற பிரசித்திப் பெற்ற வலை உலவிகளுக்கென அத்தளங்களே இத்தகைய ஆட்ஆன் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.
நீங்கள் கூகிள் குரோம் பிரௌசர் பயன்படுத்துபவர்களெனில் இந்த முகவரியில்
சென்று உங்கள் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
ஃபையர் பாக்ஸ் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்ய
இந்த ஆட்ஆன் தொகுப்புகளை எப்படிப் பயன்படுத்துவென அத்தளங்களிலேயே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நன்றி.
No comments:
Post a Comment