விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Saturday, June 8, 2013

உங்கள் கணினிக்கு நீங்களே எழுத்துரு உருவாக்கலாம்...!

நீங்க பயன்படுத்தற கம்ப்யூட்டருக்கு நீங்களே எழுத்துரு (font) உருவாக்க முடியும். அதுவும் நீங்கள் விரும்பிய டிசைனில் உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்..அதைப்பற்றிய பதிவுதான்  இது. 

நீங்கள் எத்தனையோ இணையதளங்களை பார்வையிட்டிருப்பீர்கள்.. அவற்றில் ஒரு சில மட்டும் வித்தியாசமான எழுத்துருக்களால் அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கு காட்சியளிக்கும்..

அந்த தளங்களில் மட்டும் எப்படி இத்தகைய
எழுத்துருக்கள் உள்ளன?இதுபோன்ற எழுத்துருக்களை நாமும் பயன்படுத்த முடியுமா? நமக்கும் கிடைக்காதா? என்று கூட நினைத்திருக்க கூடும்.

அத்தகைய வித்தியாசமான எழுத்துருக்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் எண்ணியதுண்டா..? அப்படி நீங்கள் நினைத்ததிருந்தால் உங்களுக்கு இப்பதிவில் விடை கிடைக்கும்.
ஆம் நண்பர்களே...!

வித்தியாசமான எழுத்துருக்களை மென்பொருள்கள் துணையுடன் உருவாக்குகிறார்கள். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நீங்களும் கூட எழுத்துருக்களை உருவாக்க முடியும்.

அதற்கு மென்பொருள் சார்ந்த அறிவு எதுவுமே தேவையில்லை.. அந்த மென்பொருளை கணினியில் இயக்கிவிட்டு, தோன்றும் பெட்டியில் உள்ள எழுத்துகளை உங்கள் விருப்பமான வடிவத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். இது மிக எளிதான ஒன்றுதான்..

இவ்வசதியை நமக்களிக்கும் நிறுவனம் ஹைலாஜிக்.

Hi-logic.com வழங்கும் அருமையான மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்...!

மென்பொருளைத் திறந்து தோன்றும் எழுத்துருக்களை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் மாற்றி அமையுங்கள்..!

மாற்றியமைக்கப்பட்ட எழுத்துருக்களை உங்களுக்கு விருப்பமான சொற்செயலிகளான MS word, Word Pad போன்றவைகளில் பயன்படுத்த தொடங்குங்கள்...!

இம்மென்பொருள் மூலம் இதற்கு முன்பே கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எழுத்துருக்களையும் மாற்றி அமைக்கலாம் என்பது கூடுதல் வசதி.

மென்பொருளில் அடங்கியுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நீங்களே எழுத்துருக்களை எளிதாக வடிவமைக்க முடியும்.

இந்த மென்பொருள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7, விண்டோஸ் 8  (32/64 பிட் )ஆகிய அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைவருக்குமே பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக போட்டோஷாப், கோரல் டிரா போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி டிசைனிங் வொர்க் செய்யும்  நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download Font Creator 

                                                                                                             Thanus

4 comments:

  1. இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

    ReplyDelete
  2. அட இந்த வசதியெல்லாம் இருக்கா! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  3. எழுத்துக்களை ப்ளொக்கரில் ஓட வைப்பது எப்படி ?

    ReplyDelete
  4. பிளாக்கரில் ஓடும் எழுத்துக்களை(running letters) உருவாக்க என்னும் பதிவில் பதிகிறேன் படித்து பயன் பெறவும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete