விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Wednesday, June 19, 2013

உலக வல்லரசாகிய அமெரிக்கா நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்.

1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.

2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.

3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5’4″)

4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.

5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.

6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )

7) USA 7வது ஜனாதிபதி அன்ரூ ஜக்சன் (Andrew Jackson) புகையிரத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.

No comments:

Post a Comment