விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Saturday, June 29, 2013

Bio-Data தயாரிக்க சிறந்த இணையதளம்  

Resumebaking

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய உலகத்தில் இளைஞர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்ய, குடும்பத்தைக் காப்பாற்ற முதலில் அவர்களுக்கு ஒரு நல்ல வேலைத் தேவைப்படுகிறது. தகுதிக்கேற்ற வேலையாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் வேலை கிடைப்பதென்பது இந்த போட்டியுகத்தில் பெரும்பாடுதான்.
resume builder
resume builder
நான் கொம்பன் என்றால் எனக்கு மீறிய கொம்பாதி கொம்பன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதாவது திறமையான ஒருவராக இருப்பதில் பெருமையில்லை. அந்த திறமையை காலத்திற்கேற்றவாறு வளர்த்துக்கொண்டு, மேம்படுத்திக்(Update) செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அத்திறமையைக் கொண்டு கிடைக்கக்கூடிய வேலையை நூலிழையில் மற்றொருவர் தட்டிப்பறித்துவிடுவார்.

சரி. திறமையை தினந்தோறும் வளர்த்துக்கொண்டு மேம்படுத்துகிறோம். வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தெரிவிப்பது எப்படி? இவற்றைத் தெரிவிக்க அடிப்படையாக, ஒரு முகப்புப் பக்கத்தைபோல (Index page)இருப்பதுதான் பயோடேட்டா(Bio-Data).

நமது திறமை என்ன ? தகுதி என்ன? என்பன போன்றவை தெள்ளத்தெளிவாக நாம் விண்ணணப்பிக்கும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியவையும் இந்த பயோ-டேட்டா அல்லது Resume கள். பயோ டேட்டாவின் முக்கியத்துவம் வேலை தேடுபவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல பயோடேட்டாவை சார்ந்தே நல்ல வேலை கிடைக்கும் . பக்காவாக , பளிச்சென பயோ டேட்டா இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

ஒரு நல்ல பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி? என்பது தான் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த குழப்பம் என்னைப்போன்று புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

இப்படித்தான் பயோடேட்டா இருக்க வேண்டும் என்ற விதிகள் இல்லை. என்றாலும் ஒரு சிலர் பயோடேட்டா விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு அதிக பக்கங்களில் பயோடேட்டாவை தயார் செய்கிறார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பலனை தராது. .கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத குப்பையான விஷயங்களையும் அதில் சேர்க்கக்கூடாது.

அதேபோல பொய்யான தகவல்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் இவைகளை தவிர்த்தல் நலம். இதனால் வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவன அதிகாரிகள் எரிச்சலடையாமல் இருப்பார்கள்.

சரி. இப்படிப்பட்ட Bio-data வை எப்படி தயாரிப்பது? இதற்காகவே உள்ளது இத்தளம்.

செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள இந்த தளம் உதவும். இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பயோடேட்டாவை சுலபமாக, எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் குழப்பமே உங்களுக்குத் தேவையில்லை. இத்தளமே அதை கையாண்டுகொள்கிறது.

கல்வி தகுதி(Educational Qualification), வேலை தேடுபவரின் நோக்கம்(Aim of Job Seeker) ,பணி அனுபவம்(Experience) போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.

பயோடேட்டாவை உருவாக்குவதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். இதற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் கீழே இருப்பதைப் போன்று துறைவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • Teacher Resume Samples
  • Nurse Resume Samples
  • Resume Samples for Manager
  • Retail Resume Samples
  • Accounting Resume Samples
  • Engineering Resume Samples
  • Military Resume Samples
  • IT Resume Samples
உருவாக்கப்படும் Resume ஒரு பக்கம் அளவே இருந்தாலும் எளிமையாக, வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் அதிலேயே வந்து விடுகின்ற‌ன. இந்த தளம் உங்கள் பயோடேட்டாவை சிறப்பாக உருவாக்கி த‌ருபவை. அதை சரியாக நிறைவேற்றுகின்றன.

இந்த தளத்தின் மூலம் பக்காவான பயோடேட்டாவை சுலபமாக உருவாக்கி கொண்டு விடலாம்.நீங்கள் இத்தளத்தின் மூலம் உருவாக்கிய பயோடேட்டாவை Print செய்துகொள்ளலாம். PDF கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். வேலைக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ‌

அதே சமயம் உங்கள் ப‌யோடேட்டாக்கள் வேலை தரும் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை பெறுவதற்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்குகிறது. நமது தகுதிக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இத்தளத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.

என்னைப் போன்று நீங்களும் வேலை தேடுபவர்களாக இருந்தால் உங்களுக்கும் இத்தளம் பயன்படும்.

உங்கள் பயோ டேட்டாவை உருவாக்க நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://www.resumebaking.com/

குறிப்பு: இத்தளத்தில் சென்று உங்கள் இ-மெயில் , மற்றும் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்ட் கொடுத்து உங்களுக்காக கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். பிறகு தோன்றும் விண்டோவில் கேட்கும் விவரங்களை கொடுத்து தொடருங்கள். இது இலவச சேவையில்லை. குறைந்த பட்ச கட்டணத்தை வசூலித்துக்கொண்டு சேவையை தருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

இதிலிருக்கும் Resume tips கள் அனைத்தையும் படிக்க இந்த இணைப்பில் செல்லவும்.

இந்த தகவல்கள் உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் Facebook, twitter, google +, orkut போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!                                                                                    

                                                                                                                 Thanushker

Wednesday, June 26, 2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!

*******************************************

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம்.நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

எனக்கு நேற்று இந்த அலெக்சாண்டரின் கதையை படித்துக் கொண்டு இருந்த போது எனது மனதில் இதுதான் நிழலாடியது.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

"வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ, என்று..

என்ன அருமை நண்பர்களே,உண்மைதானே...???

மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

                                                                                                                              நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.

முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

Sunday, June 23, 2013

தேள் கடித்தவர்களுக்கு வாழ் நாளில் இதய நோயே வராது ஆய்வறிக்கை !!

தேள் கடித்தவர்களுக்கு வாழ் நாளில் இதய நோயே வராது ஆய்வறிக்கை !!தேள்கள் மற்றும் தேள் கடிக்கு முதலுதவி பற்றிய தகவல்கள் :தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளனஇதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் !!!

எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது .

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது .

எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு

நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன் இதன் சக்தியை .

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.....

தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள் .

அன்னாசிப் பழத்தில் ஜாம் , ஜூஸ், வற்றல் என்பன தயாரிக்கப்படுகிறது . அன்னாசி பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும் . அன்னாசி பழம் சப்பிடாதோர் ஒருமுறை சாப்பிட்டு தான் பாருங்களேன்.

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்
தட்டாதவன்
2. குட்டைப் பையன்
வாமனன்
குழப்பமா இருக்கா..
நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம்கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .
அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..
அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?
தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்க ¬ுத் தடுப்பது.
நம்ம சுக்ராச்சாரியார ¬் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். ¬ அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் ¬ சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.
அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியரு ¬க்கு ஒரு கண் ஊனமாகிடுது.
அதாங்க
தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.

பலம் தரும் பலாக்கொட்டை!

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும்.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது

Friday, June 21, 2013

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,

~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD
முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,

~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இணையத்தில் தற்போது பல வழிகளில் வைரஸ் பரவி வருகிறது. குறிப்பிட்ட தளங்களுக்கு செல்வதால், குறிப்பிட்ட File களை ஓபன் செய்வதால் என்று தொடரும் இந்த லிஸ்டில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று.

எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம்/மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை திறந்து பார்த்து என்ன என்பதை படித்து விட்டு டெலீட் செய்து விட வேண்டும்.
இவ்வாறு மட்டும் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் கணினிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை PDF File-கள், அதுவும் Adobe Reader/Acrobat மூலம் திறக்கப்பட்டவை.

இது குறித்து Microsoft Malware Protection Center குறிப்பிட்ட சில பெயருடைய PDF File - களை நமது கணினிகளில் திறக்க வேண்டாம் கேட்டுக்கொண்டுள்ளது. அவை,
pdf_new[1].pdf
auhtjseubpazbo5[1].pdf
avjudtcobzimxnj2[1].pdf
pricelist[1].pdf
couple_saying_lucky[1].pdf
5661f[1].pdf 7927
9fbe0[1].pdf 7065
pdf_old[1].pdf
பெரும்பாலும் இந்த பெயரில் வந்தாலும் சில வேறு பெயரிலும் வர வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்ப்பதே நலம்.

░▒▓██►Join•••••►@[100002366952011:2048:KiriSanthan Yoganathan] ◄██▓▒░

Thursday, June 20, 2013

How to remove Autorun.inf virus?

 http://s.techtunes.com.bd/tDrive/tuner/akash0191/72023/Remove-Autorun-Virus-1_thumb.jpg

here is the trick

copy the below code and paste it in a notepad and save it as  "kill.bat", then run the kill.bat file. your problem will be solved

உங்கள் கணினி Error காட்டுகிறதா? இதோ தீர்வு..!!!

நீங்கள் கணினிக்கு புதியவரா? உங்கள் கணினியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு பிழைச் செய்தி தோன்றியிருக்கும்.. ஆனால் அவற்றை என்னவென்று உங்களால் கூற முடியவில்லையா? கவலை வேண்டாம்.. அதற்கான தீர்வை தேடி கூகிள் முதலான தளங்களில் தேடியும், உங்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறதா? 
அப்படியானால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மிகச்சிறந்த தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.errorhelp.com/
இந்த தளம் மற்றத் தளங்களைப் போலல்லாமல்நீங்கள் கூறும் பிழைகளுக்கு பிழை உதவி ( Error Help) சரியான தீர்வைத் தேடி தருகிறது.
நீங்கள் உள்ளிடும் பிரச்னைகளுக்கான தீர்வை வழங்கும் இணையதளங்களையும் காட்டுகிறது.. இதற்கு முன்பு பயனாளர்கள் இத்தளத்தில் உள்ளிட்ட கணினி குறித்த  பிழைச் செய்திகளையும், அதற்கான தீர்வை வழங்கிய விபரங்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறது. 
ஏற்கனவே அங்குள்ள இத்தகைய தொகுப்பில் உங்களுடைய பிரச்னை ஒன்றாக இருந்தால் நீங்கள் அதையே தீர்வாக பயன்படுத்திக்கொள்ள முடியும். பெரும்பாலான பிரச்னைகள் அனைத்தையும் ஏற்கனவே இதில் உள்ளடக்கி உள்ளதால் இந்த பகுதியும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 
நீங்கள் தேடும் கணினி பிரச்னைக்கான தீர்வு இத்தளத்தில் இல்லையெனில் விரைந்து அதுகுறித்த தகவல்களை நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தேடித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.. 99.9 சதவிகித கணினி பிழைகளை இத்தளத்தின் மூலமாகவே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெற்றுவிடலாம்.. 
இந்த தகவல்கள்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.. 
நன்றி     
                                                                                                    Thanushker

Wednesday, June 19, 2013

உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை !!!!

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம்.

திங்கள்: மாதம், நிலவு, கிழமை.

ஆறு: நதி, எண்ணின் பெயர்.

இசை: சம்மதித்தல், சங்கீதம்.

மாலை: பூமாலை, பொழுது.

நகை: புன்சிரிப்பு, அணிகலன்.

மதி: அறிவு, நிலவு, மதித்தல்.

வேழம்: யானை, மூங்கில், கரும்பு.

மெய்: உண்மை, உடம்பு.

உடுக்கை: ஆடை, இசைக்கருவி.

அன்னம்: சோறு, பறவை.

நாண்: கயிறு, வெட்கப்படுதல்.

வேங்கை: புலி, ஒரு வகை மரம்.

ஞா‌யிறு : கிழமை, சூ‌ரிய‌ன்
உலக வல்லரசாகிய அமெரிக்கா நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்.

1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.

2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.

3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5’4″)

4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.

5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.

6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )

7) USA 7வது ஜனாதிபதி அன்ரூ ஜக்சன் (Andrew Jackson) புகையிரத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.

Saturday, June 15, 2013

அரிய தகவல்கள்

1.கூகுள் ஒரு நொடிக்கு 37,397 ரூபாய் வருமானம் ஈட்டுகிறது!! இந்த பதிவை படித்து முடிக்கும் முன்பே அது 1,86,987 ரூபாய் பெற்றிருக்கும்!

2.எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எக்ஸாமை பொறுத்து உங்கபிரச்சனைகள் என்னன்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சா எக்ஸாம் ஈசியா இருக்குமாம்! சைகாலஜி

3.குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக இருப்பவர்களையும் விட இரண்டு ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள்!

4.ஒரு சிகிரெட்டை புகைப்பது உங்களின் வாழ்நாளின் 11 நிமிடத்தை குறைக்கிறது!

5.நீங்கள் இடக்கை பழக்கமுள்ளவராக இருந்தால் நீங்கள் கோவக்காரராகவும் எதிர்மறை உணர்வுகளுடையவராகவும் இருக்கலாம்!

6.பிரபல மோனாலிசா ஓவியத்தில் மோனாலிசாவின் உதடுகளை வரைய லியானா-டோ-டாவின்சி 10 ஆண்டுகள்எடுத்துக்கொண்டாராம் !
தாயுள்ளம்:

ராசா நல்ல உருளை கிழங்கு இருக்கு வாங்கி போப்பா!? என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வயது 75 யை தாண்டியிருக்கும் . இருந்த இடத்தில் இருந்து எழும்புவதற்கே சிரமப்படும் உடம்பு. இருந்தாலும் வீதியோரத்தில் இருந்து உருளை கிழங்கு விற்றுக்கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.

எனக்கு உருளை கிழங்கு வாங்கவேண்டிய தேவை இல்லாவிட்டாலும் அவரிடம் வாங்காமல் செல்லவும் மனதில்லை, அவர் சந்தோஷப்படட்டும் என்பவதற்காவே இரண்டு kg உருளை கிழங்கு கொடு பாட்டி என்றவாறே, என்ன பாட்டி இந்த வயதில் வந்து வியாபாரம் பண்ணுறியே பிள்ளைகுட்டி ஒன்னும் இல்லையா என்றேன்?

இருக்கானப்பு ஒரு பையன் இருக்கான் என்று சொன்னவாறே எனக்கான உருளை கிழங்கை நிறுத்துக்கொண்டிருந்தாள். அவனெல்லாம் ஒரு மனிசனா இந்த வயதில தன் அம்மாவை வேலை செய்ய விட்டிருக்கானே அவனையெல்லாம் வெட்டிப்போட்டாத்தான் சரிவரும் என்று மனதிலே திட்டிக்கொண்டே என்ன பாட்டி ஒத்தப் பிளைய பெத்துப்போட்டு நீ இப்படிக் கஷ்டப்படுறியே உன்ட மகன் வேலைவெட்டி ஒன்னும் பண்ணலியா என்று என் மனதின் ஆதங்கத்தை கொஞ்சம் நாகரிகமாக கேட்டேன்.

அவன் அப்பன் செத்தபிறகு மகன்தான் ஒரு ஆலையில கூலி வேலை செய்து என்னை நல்லாப் பார்த்துக்கொண்டான். போன மாசம்தான் தெரியாம இயந்திரத்தில சிக்கி ரெண்டு கையையும் இயந்திரம் வெட்டிப்போட்டுது. ஒருமாசமா ஆசுபத்திரியிலதான் இருக்கான், இனி என்ன செய்றது ரெண்டு கையுமில்லமா அவன் என்ன பண்ணுவான் அதுதான் நான் உயிரோட இருக்குமட்டுமாவது அவனுக்கு கஞ்சி ஊத்துவம் என்றுதான் உருளை கிழங்கு விற்க வந்தேன் என்றவாறே எனக்குத் தருவதற்காக மிச்சக் காசினை எண்ணிக் கொண்டிருந்தார். வேண்டாம் பாட்டி மிச்சத்தை நீயே வச்சுக்கோ அடுத்தவாட்டி உருளை கிழங்கு வாங்கும்போது பார்ப்போம் என்றவாறே நடக்கத் தொடங்கினேன். மயங்கி விழுந்த என் மனச் சாட்சியை தாங்கிப் பிடித்தபடி..

வியக்க வைக்கும் தகவல்கள்.

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு இந்த கதை

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?"

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"

## வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்
Photo: ## நெத்தியடி - தவறாமல் படியுங்கள் 
»»» தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை.

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.
இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு:

மனித உடலில் புதிய பகுதி கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர்கள் சாதனை

மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.Harminder Dua என்று பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியானது மனிதக் கண்ணிலேயே காணப்படுகின்றது. அதாவது கண்களில் காணப்படும் அடுக்குகளில் ஒன்றாக அமைந்துள்ள இப்புதிய பகுதி கருவிழியில் முன்னர் அறியப்பட்ட 5 அடுக்குகளுடன் சேர்த்து ஆறாவது அடுக்காக (Layer) கருதப்படுகின்றது.
இப்புதிய கண்டுபிடிப்பானது கருவிழியில் கோளாறு உள்ளவர்கள் மற்றும் ஏனைய பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதை எதிர்காலத்தில் இலகுவாக்கும் என்று குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது.

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது.

எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்.

Thursday, June 13, 2013

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்.

யாருக்கெல்லாம் புற்று நோய் வரும்

கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் நோயாக இதய நோயும், புற்றுநோயும் மாறப்போகிறது. புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பகுதி. மதுரையை சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

1. நான், 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண். எனது வலது மார்பகத்தில் வலி ஏற்பட்டு, பரிசோதனை செய்த போது புற்று நோய் என கூறுகின்றனர். இந்த வயதில் புற்றுநோய் வருமா?
-
இந்த வயதில் பெண்களுக்கு புற்றுநோய் வருவது அரிது. உங்களுக்கு வந்திருப்பது புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய, நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படியே புற்றுநோயாக இருந்தாலும், நவீன சிகிச்சையின் மூலம் மார்பகத்தை எடுக்காமலேயே குணப்படுத்தி விடலாம்.

2. நான், 20 வயது பெண். எனக்கு சினைப்பையில் கேன்சர் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், எனக்கு குழந்தை பிறக்குமா?
-
சினைப் பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இருக்காது. ஒரு சினைப் பையை மட்டும் எடுத்திருந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டு சினைப் பையையும் எடுத்திருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்காது.

3. நான் ஒரு கேசரி பிரியன். அதிலும் மஞ்சள் கேசரி, பச்சை கேசரி, சிகப்பு கேசரி என, கலர் கலராக கேசரி சாப்பிடுவதை விரும்புகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?
-
கேசரி சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

4. எனக்கு, 20 வயது ஆகிறது. தினமும், "ஷேவ்' செய்து தான், வேலைக்கு போக வேண்டும். என் கன்னத்தில், "பிளேடு' படும் இடத்தில், ஒரு மச்சம் உள்ளது. அந்த மச்சத்தில் தினமும், "பிளேடு' படுவதால், அது புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?
-
முகத்தில் உள்ள மச்சத்தில், தினமும், "பிளேடு' பட்டு உறுத்தல் ஏற்பட்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள், "பிளேடு' உபயோகிப்பதை தவிர்த்து, "எலக்ட்ரிக் ஷேவர்' மூலம், "ஷேவ்' செய்து கொள்வது நல்லது.

5. எனக்கு அடிக்கடி வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை புற்று நோயாக இருக்குமா?
-
"டென்ஷன்' காரணமாக, உங்கள் வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை தானாகவே ஆறிவிடும். மற்றபடி, அதற்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை.

6. புற்றுநோய், குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கின்றனரே... அது உண்மையா?
- .
புற்றுநோயை குணப்படுத்துவதற்கு, பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில், கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை. அதை வழக்கமாக தமிழில், "கரன்ட்' என்று அழைப்பதுண்டு. மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் வைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை.

7. நான், 50 வயது நிரம்பிய ஒரு நிர்வாக அதிகாரி. எனக்கு தலையில் முடி அதிகமாக நரைத்துள்ளது. அதற்காக நான் டை உபயோகித்து வருகிறேன். டை உபயோகித்தால் கேன்சர் வருமா?
-
தலைமுடிக்கு உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான சாயங்கள், ரசாயன பொருட்களால் ஆனவை. அவற்றை உபயோகித்த பின், கை விரல்களையும், நகத்தையும் சுத்தமாக கழுவி விட வேண்டும். அவ்வாறு கழுவாவிட்டால், அவை உணவுக் குழாய் வழியாக, குடலுக்குள் சென்று, மார்பகம், இரைப்பை, கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை உண்டாக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன.

Wednesday, June 12, 2013

பீட்ரூட்டின் மகத்துவங்கள்

இனிப்புச் சுவையுடன் அடர்ந்து சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டில் அதிகளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன.
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம்.
அல்சர்
அல்சர் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகிவிடும்.
சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி சுத்தமாக இருக்கும்.
இரத்த சோகை
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.
புற்றுநோய்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
செரிமான பிரச்சனை
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை குடித்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.
மறதி
பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால் மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி(Dementia) மற்றும் ஞாபக மறதியை(Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீப்புண்
கையை தீயில் சுட்டுக் கொண்டால் அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.
பொடுகு
பொடுகு தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகை போக்கிவிடலாம்

மாதுளை

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மேலும் புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். கொழுப்பு, நச்சுத்தன்மை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கார், பைக்குக்கு பார்க்கிங் கட்டணம்....

வாங்கும் பொருட்களில் அவன் வைத்ததே விலை...

ஒரு சட்டை ரூபாய்..750...1000...1500 என..

பேரம் என்பதே கிடையாது....

ஆனால்,

விவசாயப் பொருட்களில்...

தக்காளி 60 ரூபாய்

பீன்ஸ் 90 ரூபாய்

வெங்காயம் 80 ரூபாய் என்றதும்...

வாயைப் பொழக்கிறார்கள்.....

உச்சி வெயிலில்...

கந்து வட்டிக் கடனில்...

உடலை வருத்தி உழைத்து உருவாக்கிய பயிர்களுக்கு....

உரிய விலை கிடைக்காவிட்டால்....

நமக்காய் நாளும் உழைக்கும் விவசாயி

மண்ணையா தின்பான்!!???
"மால்"க்கு போறாங்க...

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும் ,நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!

Monday, June 10, 2013

மரங்களை வெட்டுங்கள்!!

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!மரங்களை வெட்டுங்கள்!!

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

தேன்

எத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் "தேன் "....
தேன் என்று சொல்லி சக்கரைபாகுவை விற்று விடுவோரும் உண்டு .தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா
என அறிந்துகொள்ள 2 வழிகள் ..

1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால்
அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல்.பரவாமல்
. அப்படியே நிற்கும் .

2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால்
அது நீரோடு கரையாமல் , நேராக கீழே சென்று அமரும்