விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Thursday, May 30, 2013



புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

"என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!
புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

"என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!
அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...

நான் பார்த்தேன்.......அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....

எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....

நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........

அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...

நான் பார்த்தேன்.......அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....

எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....

நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........

- @[214543918613622:274:SivaKarthikeyan]

Wednesday, May 29, 2013


மங்கலான புகைப்படத்தை தெளிவான படமாக மாற்றும் மென்பொருள்

Photo Clear software 

குறைந்த அளவுடைய பிக்சல் கேமராவைப் பயன்படுத்தி எடுத்த படங்களின் தரத்தையும், மங்கலான படங்களையும் தெளிவான படங்களாகவும் மாற்ற உதவுகிறது இந்த மென்பொருள்.

குறைந்த கொள்ளவு கொண்ட இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் புகைப்படங்களையும் தெளிவானதாக மாற்றுங்கள்...

நான் மாற்றிய படம் ஒன்று உங்களின் பார்வைக்கு: 
இதுபோன்று உங்கள் படத்தையும் தெளிவானதாக மாற்றிக்கொள்ளுங்கள். புகைப்படத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மென்பொருள் அதிக பயனைத் தரும்.


குறைந்தளவு Pixels camera வசதியுடன் கூடிய செல்போனில் படம்பிடித்த படங்களையும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி படங்களை தெளிவானதாக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:

Update:

இந்த இணைப்பை கிளிக் செய்து செல்லும் பக்கத்தில் இவ்வாறு தோன்றும். 


இதில் உள்ள Captcha Letters -ஐ தவறில்லாம் தட்டச்சிட்டு அருகில் இருக்கும் Download என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு Download Link கிடைக்கும். 


wait for a queue to download
அதை கிளிக் செய்யும்போது வேறொரு பக்கத்திற்கு செல்லும். அந்த பக்கத்திலேயே மென்பொருளும் தரவிறங்கும்.

downloading file

இதற்கு ஒரு நிமிடம் ஆகலாம். பிறகு அந்த இணைப்பை கிளிக் செய்து மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மிக்க நன்றி..!

 இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்
                                                                                                                                                  
                                                                                                                                   Thanus

Tuesday, May 28, 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா?

வணக்கம் நண்பர்களே..!

ur celphone original or not
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#060# என தட்டச்சிடுங்கள்...
உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும்.
அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும். 

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்

1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.


என்ன நண்பர்களே..! இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


நன்றி நண்பர்களே..!


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 
 
                                                                  Thanus

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....  http://omnitechsupporter.com/wp-content/uploads/2012/10/ms-word-2-256x256.png

நீங்கள் எம்.எஸ். வேர்ட் பயன்படுத்துகிறீர்களா?

தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போது வெள்ளைநிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைப் பார்த்து கண்கள் சோர்வடைந்து போகலாம்.

வருடக்கணக்காக எம்.எஸ். வேர்ட் (MS-Word) பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்னையாகவும், கண்ணொளி குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறதாம்.

இதற்கு ஒரு மாற்றுவழி Microsoft கொடுத்திருக்கிறது.

மாற்றுவழியை செயல்படுத்தி உங்கள் MS-Word -ன் பின்னணி நிறத்தை மாற்றிப் பயன்படுத்த முடியும். Background Color மட்டமல்ல..

எழுத்துகளின் நிறத்தையும் மாற்றிப் பயன்படுத்த முடியும். இம்மாற்றங்களினால் கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கலாம்.

செயல்படுத்தும் முறை:

1. இதைச் செயல்படுத்த MS-Word திறந்துகொள்ளுங்கள்.
2. அதில் Tools Menu செல்லுங்கள்.
3. தோன்றும் Drop Down Menu-வில் Options தேர்ந்தெடுக்கவும்.
4. Options-ல் General டேபை கிளிக் செய்யுங்கள்.
5. General Tab கிளிக் செய்து திறக்கும் பெட்டியில் "blue background with white text" என்பதில் டிக் மார்க் (Tick Mark) ஏற்படுத்தி வெளியேறுங்கள்.

பிறகு நீங்கள் ஒவ்வொரு முறையும் Word Document திறக்கும்போது நீல நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துகளுடன் தெரியும்.

இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் முன்பு செய்த படிமுறைகளிலேயே சென்று blue background with white text என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிடுங்கள். வேர்ட் டாக்குமெண்ட்டானது முன்பு இருந்தபடியே வெள்ளை நிற பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களோடு (White background and black text)இருக்கும்..                                             Thanus
முகப்புத்தக (FACEBOOK) நட்பால் வந்த விபரீதம்: ரூ.5 கோடிக்காக கடத்தப்பட்ட சிறுவன்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் முஸ்தபா(13) என்ற சிறுவன் 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்ததால் தனது முகப்புத்தகம் மூலம் பல முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு முகப்புத்தகத்தில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய தோழமையை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை, அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், 'முஸ்தபாவை விடுவிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.5 கோடி தர வேண்டும். தவறினால் அவனை கொன்று விடுவோம்' என்று கூறி மிரட்டினர். இச்சம்பவம் குறித்து கராச்சி பொலிசாரிடம் அவர் புகார் அளித்தார்.
அவருக்கு தொடர்ந்து வந்த செல்போன் அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த பொலிசார் செல்போன் சிக்னலின்படி, கடத்தல்காரர்களின் ரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
இன்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறுவன் முஸ்தபாவை பொலிசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், 'முகப்புத்தகம் போன்ற இணைய தளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்' என்று கூறினார்.

Monday, May 27, 2013

கீபோர்ட்டை மடிக்கலாம் - புதிய தொழில்நுட்பம்

வணக்கம் நண்பர்களே..!

கையில் ஒரு பேப்பரை சுருட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல் இந்த கீபோர்ட்டையும் கையோடு சுருட்டு எடுத்துக்கொண்டு போய்விடலாம்..

அதுதான் இந்த கீபோர்ட்டின் சிறப்பே... தரமான சிலிகனால் உருவாக்கப்பட்ட
இந்த கீபோர்ட்டை பயன்படுத்தும்பொழுது கொஞ்சம்கூட உராய்வால் ஏற்படும் சத்தம் வராது என்பது கூடுதல் சிறப்பு..

அதுமட்டுமில்லீங்க... சாதாரணமாக நாம் தற்போது பயன்படுத்தும் கீபோர்ட்டில் தண்ணீர் அல்லது டீ, காபி போன்றவைகள் பட்டால் கீர்போர்ட் வேலை செய்யாமல் மக்கர் செய்யும்.. ஆனால் இந்த கீபோர்ட்டை தூசி, அழுக்கை அகற்ற தண்ணீர் விட்டே துடைக்கலாம்... ஒன்றும் ஆகாது.


தண்ணீர் உறிஞ்சா தன்மைக்கொண்டது. பிளாஸ்டிக் போன்ற நெகிழும் தண்மை கொண்டதால் ஒட்டாத தன்மையாலும், தண்ணீர் இதற்கு எதிரியே அல்ல..

வயர்லஸ் டைப் கீபோர்ட் என்பதால் நமக்கு வசதியான இடத்தில் வைத்து தட்டச்சிட்டுக்கொள்ள முடியும். அதேபோல USB Port-ல் இணைத்தும் கூட பயன்படுத்த முடியும்.

மிக குறைந்த எடை கொண்ட இந்த கீபோர்ட்  2.4 கிகா ஹெர்ட் வேகத்தில் இயங்கி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

 சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அதே QWERTY போர்ட்தான். மொத்தம் 121 விசைகளைக் கொண்டுள்ளது.

இதை ஆங்கிலத்தில் Multimedia Roll up USB Keyboard என குறிப்பிடுகின்றனர்.



கீபோர்ட்டை தண்ணீரில் நனைத்து முறுக்கி உலர்த்துகிறார்கள்...


நன்றி நண்பர்களே..!

போர்ட்டபிள் சாப்ட்வேர் தொகுப்பு மென்பொருள்

போர்ட்டபிள் சாப்ட்வேர் என்றால் என்ன? 

போர்ட்டபிள் சாப்ட்வேர் என்பது கணனியில் அந்த மென்பொருளை நிறுவாமல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மென்பொருளாகும். அதாவது சாதாரணமாக நமக்குத்தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பிறகு அதில் .exe கோப்பை இயக்கிய பிறகே அந்த மென்பொருள் நம்முடைய கணனியில் நிறுவப்பட்டு, பிறகுதான் அதை நாம் இயக்கிப் பயன்படுத்த முடியும்.  
அவ்வாறில்லாமல் கணினியில் நிறுவாமல் ப்ளாஷ் டிரைவ் (Flash Drive)  மூலம் நேரடியாக பயன்படுத்தும் மென்பொருள் போர்ட்டபிள் சாப்ட்வேர் ( Portable software)எனப்படும். 
portable sofware collection software
இன்றைய தொழில்நுட்பங்கள் அதிக வளர்ச்சியடைந்து விட்ட இச்சூழ்நிலையில் கணனியில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான மென்பொருள்களுமே போர்ட்டபிள் சாப்ட்வேராக (All portable software in one place) வந்துவிட்டன.
அவற்றில் Operating system software முதல், photo editing software, browsers வரை அனைத்து மென்பொருள்களுமே போர்ட்டபிளாக உருவெடுத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 
இத்தகைய போர்ட்டபிள் சாப்ட்வேர்களை உங்களுடைய பென்டிரைவில் ஒரு முறை தரவிறக்கம் செய்துகொண்டால் போதுமானது.(One time software install) நீங்கள் எந்த ஒரு கணனியிலும் போர்ட்டபிள் மென்பொருள்களை பயன்படுத்தலாம். (You can use portable software any computer)
ஒரு கணனி பயனருக்குத் தேவையான முக்கியமான மென்பொருள்கள் அனைத்தையுமே போர்ட்டபிள்.காம் தொகுத்து வழங்குகிறது.
இத்தொகுப்பினை உங்கள் பென்டிரைவில் ஒரு முறை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டால் போதுமானது. 

Features of Portable apps software 

நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள கணினிகளில் உங்களுடைய பென்டிரைவைப் பொருத்தி பயன்படுத்த தொடங்கிவிடலாம். 
கணினியில் உள்ள programe start menu வைப் போன்றே இந்த மென்பொருளிலும்(portablesoftware.com) மெனு ஒன்று தோன்றும். அதில் உள்ள மென்பொருள்களை இயக்கிப் பயன்படுத்தலாம். தேவையெனில் உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களை கூடுதலாக தரவிறக்கம் செய்தும் இந்த மெனுவில் இணைத்துப் பயன்படுத்தலாம். 
மிகச்சிறந்த பயனுள்ள இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த செல்ல வேண்டிய முகவரி: http://portableapps.com/
நன்றி                                                                                                                   Thanus

Saturday, May 25, 2013

A True Engineer Always Protects The Environment!                            

  http://blogs.cio.com/sites/cio.com/files/u7727/Smartphones.jpg             எப்போது பார்த்தாலும் சிலர் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை(cellphone) வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. அதே போல லேட்டாப்பையும் இவர்கள் விடுவதே இல்லை. படுக்கையில் அமர்ந்துகொண்டு லேப்டாப்பை பயன்படுத்திவிட்டு, அதை ஆப் செய்யாமல் கூட உறங்கி விடுபவர்களும் உண்டு. இது போன்ற செயல்கள் மிக தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

to get deep sleep

எம்.ஐ.டி மாணவர்கள்(MIT Students) நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும்(Radiation) மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும்(Mental stress) உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான்(Deep Sleep) மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை(Suggestions) படியுங்களேன்.

மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான்(Cotton mattress)வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள். நாம் உபயோகிக்கும் படுக்கையும்(bed) நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு ஏற்ற வகையில் வசதியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு(Quality) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படுக்கைக்கு மட்டுமல்ல எந்த ஒரு பொருளுக்கும் இது பொருந்தும்.

பழையது வேண்டாமே!

படுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி(Body pain),)முதுகு வலி(back pain), கழுத்து வலி( neck pain) தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

தலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல்(Bridge) தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு(backbone) செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

மனதை கவரும் நிறங்கள்(Enchantment colors)

படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள்(Iron beds) தூக்கத்திற்கு ஏற்றதல்ல!

படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம்(Light green, light blue, white, cream colors) ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.

படுக்கை அறையில் அதிக வெளிச்சம்(light) இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை(window screen) கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சீதோஷ்ண நிலைக்கும்(climate), தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை(Cold climates with mild) இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.

மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்(Electronic Devices)

படுக்கை அறையில் டி.வி(tv), கம்ப்யூட்டர்(computer) போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப்(Laptop), டிவி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள்(Magnetic waves) தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

முக்கிய குறிப்பு:

செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. மூன்று அல்லது நான்கு அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும் நிலை ஏற்படும். G.Thanus

உதவி!


இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.

இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.

அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தி
ன் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்
இந்த மாணவி பெயர் சுனந்தா கயர்வர். மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா இங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேர்வில் சாதனை படைத்த இந்த பிளஸ்-2 மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி (முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கு கிடைத்தது போல) கிடைத்துள்ளது.

காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பார். இதற்கான சட்ட நடைமுறைகளையும் மேயர் ஷோபா யாதவ் செய்து அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார்.

25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்.

அந்த மாணவியை நாமும் வாழ்த்துவோம்....
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது . ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல்தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும ், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால்அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பத ை பார்த்திருப்பீர ்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.

தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள்வடிவமைக்கப்படுக ின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல்மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார் . அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவி ட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால் , நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.

இதற்கு எடுத்துக்காட்டு , 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது . அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாகஅதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது .

அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனித ர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும்.மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்கமாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள் ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.க ப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும ். அப்பொழுது பலூன் பறக்காது.                                                Thanus

Friday, May 24, 2013

கணினியின் தாக்கத்திலிருந்து கண்களை காப்பாற்ற

வணக்கம் நண்பர்களே..!

கணினியால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: 

நாள்தோறும் கணியைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களிலும் வலி, உறுத்தல், எரிச்சல், உலர்வுத் தன்மை ஏற்படும்.

  1. பொதுவாக கணினியில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் (Computer Vision Syndrome)எனப்படும் கண்சார்ந்த பாதிப்பு ஏற்படும். 
  2. கைகளில் விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், தோள்பட்டை என மூட்டு இணைப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, வலி அதிகரிக்கும். 
  3. தொடர்ச்சியாக கணினித் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலும், வேலையில் தொடர்ச்சியான ஈடுபாடு காட்டுவதாலும் கண்கள் உலர்ந்து, இமைகள் சிமிட்டுவதைக் கூட மறந்து விடுகிறது. 
  4. இயல்பான சிமிட்டல்களின் அளவு குறைந்துவிடுகிறது. 
  5. கண்களில்  ஒரு வறட்சித் தன்மை ஏற்படும். 
இதன் விளைவாக
  • தெளிவற்ற பார்வை
  • கண்களைத் திறந்து வைத்திருக்கும்பொழுதே கண் முன்னே மின்மினிப் பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம்
  • திடீரென கண்ணின் முன்னே வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைதல்
  • கண்களில் நீர்வழிதல்
  • எழுத்துக்கள் மங்கலாக தெரிதல்
  • இரண்டிரண்டாக உருவங்கள் தெரிதல்
  • கண்ணிற்கு முன்பு பனிப்படலம் மூடியதைப் போன்ற ஒரு தோற்றம்
இவை அனைத்துமே ஏற்படும்.

இந்த பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? 

கணினி இருக்கை: 

முதலில் கணினியில் பணிபுரியதக்க இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இருக்கையானது ஏற்றி, இறக்கும் வகையிலும் நன்கு சுழலும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
கணினியில் உள்ள விசைப்பலகைக்கு இணையாக நீங்கள் அமரும் இருக்கையில் கைப்பிடி உங்கள்  கைகளைத் தாங்க வேண்டும். அதாவது கணினியில் உள்ள விசைப் பலகையில் விரல்களை வைத்து தட்டச்சிடும்பொழுது உங்கள் முழங்கையானது கீழே இறங்காமல்  நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் கைப்பிடியில் இருக்குமாறு உங்கள் இருக்கையின் உயரத்தை வைத்திருக்க வேண்டும்.

போதுமான வெளிச்சம்: 

  1. நீங்கள் பயன்டுத்தும் கணினி திரைக்கும், கணினியிலுள்ள விசைப்பலகைக்கும் போதுமான அளவில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, உங்கள் பணியை நீங்கள் தொடரலாம். 
  2. உங்களுக்கு எதிர்புறமிருந்து ஜன்னல் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ வெளிச்சம் ஏற்பட்டு அது உங்கள் கண்களில் பட்டு எதிரொளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எதிர்புறம் இருந்து வரும் வெளிச்சமானது கண்டிப்பாக உங்கள் கண்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும். 
  3. கணினித் திரைக்கும் உங்களுக்கும் தோராயமாக 33 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்களை கைகளை நீட்டினால் கணினித் திரையை உங்கள் விரல் நுனி தொடும் தூரத்தில் கணினித் திரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

வருமுன் காப்போம்: 

கணினியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். அதாவது இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்த வேண்டும்.
அதென்ன இருபதுக்கு இருபது பார்முலா என்கிறீர்களா?

இருபதுக்கு இருபது: 20-20-20

கணினித் திரையையே தொடர்ந்து உற்றுப்பார்த்து வேலை செய்யாமல் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறுபக்கம் திருப்பி, இருபது அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை அல்லது பொருள்களை தொடர்ச்சியாக இருபது நொடிகள் பார்ப்பதைத்தான் இருபதுக்கு இருபது பார்முலா என்பார்கள்.
கணினித் திரையிலேயே பார்வையை தொடர்ந்து மணிக்கணக்கில் பதிக்காமல், அதிலேயே தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இருக்காமல் பார்வையை வேறு திசையில் திருப்பி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களை, குறிப்பிட்ட நொடிகள் பார்க்க வேண்டும்.

இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்: 

பார்வை கணினித் திரையைவிட்டு வேறு திசையில் செலுத்தும்பொழுது கண்ணில் உளை தசைகள் இயக்கப்பட்டு, விழித்திரை லென்சின் குவிய தூரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் மாறுபட்ட கண்ணிற்கு இயக்கம் கிடைக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதால் கண்கள் இயல்புநிலை, இயல்பான இயக்க நிலையைப் பெறுகிறது.
வருடத்திற்கு ஒருமுறையாவது கண்களில் உள்ள பிரச்னைகளை, தகுதியான கண் மருத்துவரை அணுகி கண்சோதனை செய்துகொண்டு, ஆலோசனைப் பெறுவது உங்கள் கண்களைப் பாதுக்காக்க ஒரு அற்புதமான முன்னேற்பாடான பாதுகாப்பு வழிமுறையை ஏற்படுத்திக்கொடுக்கும்.
நன்றி நண்பர்களே...!                                                                      Thanus
தோல்வியாதி தீர

தோல் நோய்கள் வந்து சிலருக்கு தோல்கள் தடித்துக் (Callus) காணப்படும். இதை சீராக்க கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து (Coriander leaf paste) தடித்த தோல்பகுதியில் பூசி வர மூன்று நாட்களில் தோல் மிருதுவாகும். தோலும் அழகாக மாறும் (get soft skin ). செய்து பாருங்கள்.. நிச்சயம் பலன் தெரியும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

              

உடலுக்கு உடனடி சக்திக்கு தேன்
பொதுவான குணம்  ஒரு கிலோ கிராம் தேன் ஐந்து லட்சம் மலர்களில் இருந்து பெறப்படுகிறது. தேனும், நெய்யும் கலக்க கூடாது. கலந்தால் அது நஞ்சாகும். தேனும், முட்டையும் கலக்கக்கூடாது. தேனும், சீனியும் கலக்கக்கூடாது. தேன் சூடாகும் போது சத்துகளை இழந்துவிடும்.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் HONEY
மருத்துவக் குணங்கள்
அழகு மலர்கள் மனிதர்களுக்கு வழங்கும் இயற்கை, ஒப்பற்ற மருந்து தேனாகும்.
பலவகை தேன்கள் கிடைக்கின்றன. இனிப்பு சுவையாக இருந்தாலும் சுத்தமான தேன் உடலுக்கு கசப்பு சுவையைக் கூட்டி நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு உடனடி சக்தி தரும். நாக்கில் பட்டவுடன் உயிர் காக்கும் மருந்தைப்போல் உடனடியாக இரத்தத்தில் கலக்கும்.
தேன் சுவைக்கு இணையான பொருள் எங்கும் கிடைக்கவில்லை. கண் ஒளி கூட்டும். விளையாட்டு துறை அன்பர்களுக்கு இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும். 80% காரம், 20% அமிலம் கலந்த மனிதனின் சரிவிகித உணவு. கழிவுகள் இல்லா உணவு.
டிபி, சளி, இருமல் குணம் அடையும்.
உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர்.
நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
இதயம், ஈரல் பலம் பெறும்.
குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன.

                                                                              Thanus

இயற்கையான அழகு குறிப்புகள்

Natural beauty tips
தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..

ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான்.

இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

இயற்கையான அழகு குறிப்புகள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். 

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.

காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

நகத்தைப் பராமரிக்க: 

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

இதழ்களை பராமரிக்க: 

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும். உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.

பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.


முகத்தைப் பராமரிக்க: 

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் "பளிச் பளிச்" போங்க..!

கழுத்தை பராமரிக்க: 

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க: 

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.


கருவளையம் நீங்க: 

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க: 

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் "மங்கு" என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

Nature cleanser (இயற்கை கிளென்சர்)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.

இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.

வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

முகப்பரு போக்க: 

முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.



பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து  பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்...

முகம் பளிச் பளிச்தான் போங்க...!!

மற்றொரு இயற்கையான எளிய முறை:

கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா...? காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

முகச்சுருக்கம் போக்க: 

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள்.  காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம்.

இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.


மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.. நீங்களும் உலக அழகிதான்...!!! உலக அழகன்கள்தான்...!!!
summary:
Natural beauty products are easy to maintain our health. How each part of the body to maintain natural materials that stated in this post.

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

Download செய்கிறீர்களா? எச்சரிக்கை குறிப்புகள்


வணக்கம் நண்பர்களே..!

இக்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எதாகினும் ஒரு மென்பொருளைத் தங்களது தேவைகளுக்கேற்ப இணையத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டி உள்ளது.

download-carful information
குறிப்பாக இலவச மென்பொருள்களை நம்மில் பலர் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம்.

இலவசமாக வழங்குவதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு என்ன நன்மை?

இருக்கவே செய்கிறது.. ஒன்று அந்நிறுவனத் தயாரிப்புகளை (softwares) விளம்பரப்டுத்தி சந்தைப்படுத்துவது.


மற்றொன்று அந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும்பொழுது,தரவிறக்கம் செய்யப்படுகிற மென்பொருளோடு Spyware, Virus போன்ற புரோகிராம்களும் சேர்ந்து தரவிறங்கும் வகையில் அமைத்திருப்பது.

பெரும்பாலான இலவச மென்பொருள்கள் இரண்டாவது வகையைதான் பின்பற்றுகிறது.

அப்படியெனில் இலவச மென்பொருள்களைப் பயன்படுத்துவது ஆபத்து என பொருளல்ல...

இலவச மென்பொருள்களை தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் அதனுடன் சேர்ந்து நமது கணினியில் தரவிறங்கும் Spyware, Virus களை நீக்குவது முக்கியம்.

நாம் தரவிறக்கி பயன்படுத்தும் பெரும்பாலான மென்பொருள்களில் இதுபோன்ற தேவையற்ற புரோகிராம்கள் இருப்பதால் அவற்றை நீக்க, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள், Spyware cleaner போன்ற நன்மை தரும் புரோகிராம்களை இயக்கி அவற்றை நீக்கிவிடலாம்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமும் இதுபோன்ற தேவையற்ற புரோகிராம்கள் நீக்கிவிடலாம்.

எப்படி?

நாம் ஒரு இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்யும் முன்பு, அப்பக்கத்தில் உள்ள இணைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் அம்மென்பொருளைப் பற்றி பிறர் அளித்துள்ள கருத்துகளையும் அப்பக்கத்தில் படித்து முடித்தப் பிறகே Download செய்யத் தொடங்க வேண்டும்.

இப்படி அப்பக்கத்திலுள்ள கருத்துகளை படிப்பதன் மூலம் ஓரளவிற்கு அம்மென்பொருளின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

மென்பொருளுக்குரிய உண்மையான தளத்திலிருந்து தரவிறக்கம் செய்வது நல்லது. பிற தளங்களிலிருந்து டவுன்லோட் செய்வது பாதுகாப்பிற்கு உகந்ததல்ல.

Google, Yahoo போன்ற மிகப் பிரபலமான தேடல் வலைத்தளத்தைத் திறந்து, அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய மென்பொருளின் பெயர், அக்கோப்பின் பெயர் இவற்றோடு spyware, virus என்ற சொற்களையும் கொடுத்து தேடினால், இதற்கு முன்பே இம்மென்பொருளை தரவிறக்கி, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அவைகளைப் பற்றி மற்ற பயனர்கள் எழுதியிருப்பர். எச்சரிக்கை செய்திருப்பார்கள்.

இவ்வாறு தட்டச்சிட்டு தேடுவதால் மென்பொருளைப் பற்றி பிறரின் எண்ணங்கள், கருத்துகள், பாதுகாப்பு தன்மைகள் குறித்து நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இதனால் அம்மென்பொருளைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்து விடலாம். நாம் தரவிறக்க வேண்டிய மென்பொருள் நல்லதா  கெட்டதா என நமக்கும் தெரிந்துவிடும்.

தரவிறக்கம் செய்து மென்பொருள் கோப்பினை நிறுவும் முன்பு, கணினியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி சோதனை செய்துகொள்வது நல்லது. இதனால் மென்பொருளை நிறுவிய பிறகு ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துவிடலாம். வைரஸ் இணைந்தே கொடுக்கப்பட்டிருக்கும் மென்பொருளைகள் இதன் மூலம் தவிர்த்துவிடலாம்.

இறுதியாக இதனையும் நான் அடிக்கடி செய்துகொள்ள வேண்டும். அதாவது கணினியில் உள்ள கோப்புகளை அடிக்கடி பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் கணினியில் ஏதேனும் அபாயகரமான வைரஸ் தாக்குதல் ஏற்படும்போது கூட நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

பிறகு தேவையெனில் கணினியை Restore செய்துவிடுவதன் மூலம் மீண்டும் கணினி பழைய நிலையை அடைந்துவிடும்.

இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கணினியில் வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும். நம்முடைய தகவல்களும் பாதுகாக்கப்படும்...


நன்றி நண்பர்களே..                                                                                                                     
                                                                                                                                                                    !இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.                                                                                            G.Thanus

Thursday, May 23, 2013

Microprocessor-கணினியின் மூளை (சிறப்பு கட்டுரை)


வணக்கம் நண்பர்களே..!

சாதாரணமாகவே நாம் கணினியை மனிதனின் மூளைக்கு ஒப்பிட்டுச் சொல்வோம்.

AMD Microprocessor
மனிதனின் மூளைக்கு சரிசமமாக இல்லாவிடினும், மனிதனை விட அதிக கணக்குகள் மற்றும் மனிதனுக்கு தேவையானவைகளை , குறைந்த நேரத்தில் விரைவாக வேலைகளை செய்து தரும் ஒரு சாதனம்தான் கணினி.

கணினிக்கும் மூளை உண்டு. இதை  மைக்ரோ பிராசசர் (Microprocessor) என்கிறோம்.  தமிழில் சொல்வதெனில் நுண்செயலி.


நுண் செயலி என்றால் என்ன? இதன் பணி என்ன?
(What is a micro processor? What is the task?)
நுண் செயலி என்பது ஒரு கட்டுப்பாட்டு இயக்கு மையம் ஆகும். ஆங்கிலத்தில் CPU என்பார்கள். இது சில்லுக்குள் அடங்கியிருக்கும்.

இது கணினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளும் (Hardware)கட்டளை சைகைகளை ஏற்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

கணினியில் கொடுக்கும் செயல்கள் பல்வேறு நுண்செயல்களாக மாற்றப்பட்டு இயக்கும் பணியை இது செய்வதாலேயே இதை நுண்செயலி என்கிறோம்.

நுண்செயலியைக் கண்டுபிடித்தவர் யார்? 
(Who is the inventor of microprocessor?)
கணினியை இயங்குவதற்கு மூலாதாரமான நுண்செயலியைக் கண்டுபிடித்தவர்  மெர்சியன் டெட் ஹாப் (1969). இவர் கால்குலேட்டருக்குத் தேவையுள்ள பல சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் வடிவமைத்ததே உலகின் முதல் நுண்செயலியாகும்.

இந்த நுண்செயலியை busicom என்ற ஜாப்பன் நிறுவனம் Calculaterக்குத் தேவையான சர்க்யூட் உருவாக்கித் தர இன்டென் நிறுவனத்தை நாடும்பொழுது, அதற்கான முயற்சியில் இன்டெல் நிறுவனம் இறங்கியது.
அந்நிறுவனத்தில் அப்பொழுது பணிபுரிந்த Mercian E Ted haff அவற்றிற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். அதுவே முதல் நுண்செயலி ஆயிற்று.

தற்காலத்தில் பல்வேறு வகையான நுண்செயலிகள் வந்துவிட்டன.

நுண்செயலிகளின் வகைகள்: 

1. RISC வகை நுண்செயலிகள்
2. x86 வகையான நுண்செயலிகள்
3. 64 பிட் வகையான நுண்செயலிகள்

இத்தகைய பயனுள்ள நுண்செயலிகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன தெரியுமா?

கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் Miro Prossorம் ஒன்று. இதனால்  கணினி உலகத்தில் மாபெரும் புரட்சியே ஏற்பட்டுவிட்டது.

மின்னணு உலகத்தில் இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

இம்மின்னணு நுண்செயலியை(Microprocessor) உருவாக்க க்வார்ட்ஸ்(Kvarts) என்னும் கண்ணாடி ஸ்படிகம் பயன்படுகிறது.

இக்கண்ணாடி ஸ்படிகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அது க்வார்ட்ஸ் சிலிக்கானாக (Kvarts sio2) மாற்றப்படுகிறது.

க்வார்ட்ஸ் சிலிக்கானாக மாற்றப்பட்ட தகட்டில் இணைப்புகள் வரையப்படுகிறது.

முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட (Microprocessor)நுண்செயலி 4004ல் 2300 டிரான்சிஸ்டர்கள் வரைக்கும் வரைந்தனர். தற்போது Pentium 4 போன்ற பிராச்சர்களில் கோடிக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் வரைந்துள்ளனர். இத்தனை டிரான்சிஸ்டர்கள் (Transistors) அடங்கியுள்ள நுண்செயலின் அகலம் எவ்வளவு தெரியுமா?

வெறும் கால் அங்குல சதுரப் பரப்பளவுதான்.

சிலிக்கனின் மேல் போட்டோ resist மூலம் மின்கடத்தும் பொருள், மின் கடத்தாப் பொருள் மற்றும் குறை கடத்தி ஆகியவற்றையும் சேர்த்தே இதில் வடிவமைக்கின்றனர். இது அவ்வளவு சுலபமானது அல்ல.

இந்த மொத்த அமைப்பும் ஒரு டிரான்சிஸ்டர் போல் வேலை செய்வதாலேயே இவற்றை டிரான்சிஸ்டர் என்றழைக்கிறோம்.

இவ்வாறான சிக்கலான இணைப்புகளை வரையும் முறைக்கு போட்டோ லித்தோகிராபி என்று பெயர்.

இவ்வாறு வரையப்பட்ட இணைப்புகளில் உள்ள மெல்லிய கண்ணுக்குத் தெரியாத கோடுகளின் அகலம் மைக்ரான் என்னும் அலகால் அளவிடப்படுகிறது.

இவற்றை வெறும் கண்களால் அளவிட முடியாது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பாகம். குறிப்பாக நாம் உணர்ந்துகொள்ளும்படி சொல்ல வேண்டுமானால் நம் தலைமுடி இருக்கிறதல்லவா? அதில் ஒரு முடியை எழுபதாக பிரித்தால் என்ன அளவு வருமோ.. அந்தளவுதான் மைக்ரான்...

இந்த மைக்ரான் அளவை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது.

நன்றி நண்பர்களே..!!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். Thanushker.blogspot.com